Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 24 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து, மட்டக்களப்பு காந்தி பூங்காவில், நாளை சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதுத் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
'ஊடகவியலாளர்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக செயற்படுத்தும் நிலைமை உருவாக வேண்டும். தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளின் நிர்மாண வேலைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' ஆகிய மூன்று பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தக்கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஊடகவியலாளர்களையும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும், சமூக ஆர்வலர்களையும் கலந்துகொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அழைப்பு விடுக்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago