2026 மே 02, சனிக்கிழமை

ஊரடங்கால் பழங்குடியினர் வாழ்வாதாரம் இழப்பு; உதவுவதற்கு முன்வருமாறு கோரிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக, திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு,  வீரமாநகர் கிராமத்திலுள்ள பழங்குடியினர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் அவர்களுக்கு உதவுவதற்கு, சம்பந்தப்பட்டத் தரப்பினர் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

மேற்படி கிராமத்தில், சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றனர் என்றும் அவர்களின் பிரதான தொழில் விறகெடுத்தல், தேன் எடுத்தல், கூலி வேலை செய்தல் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

தற்போது நாட்டில், பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளமையால், அவர்களது வாழ்வாதார தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக வீரமநகர் கிராமத்துக்கு, விறகுகளை கொள்வனவுச் செய்ய வருகின்ற வியாபாரிகள், ஊரடங்குச் சட்டத்தால்  வராமையால், விறகுகள் விற்பனை செய்யாது அப்படியே கிடப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் ஏழைகளாக இருப்பதால், பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தால்  தொழிலின்றி அன்றாட உணவுக்கும் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதனால் அரசியல்வாதிகளும் தனவந்தர்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமக்கு உலர் உணவு பொதிகளையும் ஏனைய உதவிகளையும் செய்துதர வேண்டுமென மூதூர் வீரமாநகர் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .