Editorial / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தில், ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் வரலாற்றுப் புனிதமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை, வழிபாட்டு நடவடிக்கைகளுக்காகத் திறப்பதற்கு, இன்னும் சில நாள்கள் ஆகும் என்று, தலதா மாளிகையின் தியவடனநிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்துள்ளார்.
வணக்கஸ்தலங்கள் திறக்கப்படுவது குறித்து, அரசாங்கத்தால் இதுவரை எவ்வித அறிவிப்புகளும் விடுக்கப்படாததன் காரணமாகவே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, தியவடன நிலமே மேலும் தெரிவித்தார்.
வணக்கஸ்தலங்களுக்குச் செல்லுதல், கூட்டுப் பிரார்த்தனை நடத்துதல் திருவிழாக்களை நடத்துதல் என்பவற்றுக்கு, அரசாங்கம் தற்காலிக தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்நிலையிலேயே, தலதாமாளிகையும் பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவிடப்படுவது, பிற்போடப்பட்டுள்ளது.
எனினும் தலதாமாளிகையிலுள்ள புத்தரின் புனித சின்னத்துக்கு, தினமும் பூஜைகள் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தியவடன நிலமே தெரிவித்தார்.
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago