R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரத்தினபுரி- வேகங்கை ஆற்றை இடை மறித்து, இரவு நேரங்களில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி- நிவித்திகல வீதியை அண்மித்து ஓடும் வேகங்கை ஆற்றின் பாலத்திற்கு அடியிலும், இதன் அண்டிய பகுதிகளிலும் இச்சட்டவிரோத செயற்பாடு பரவலாக இடம்பெற்று வருகின்றது.
இவ்விடயமாக பொலிஸ் நிலையங்களுக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆற்றின் இரு கரையோரங்களிலும் காணப்படும் இரத்தினக்கல் கனிய மண்ணை வெட்டி எடுத்து அவற்றை ஆற்று நீரில் கழுவுவதால், இந்நீரை அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தும் மக்கள் சுகாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago