2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

ஊவாவிலுள்ள தகனச்சாலைகளில் நெருக்கடி இல்லை

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வாராஜா, சுமணசிறி குணதிலக

ஊவா மாகாணத்தில் காணப்படும் 11 தகனசாலைகளின் நடவடிக்கைகள் நெருக்கடிகளின்றி, சுமூகமாக நடைபெற்று வருவதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்தின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான தகனசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில், ஆளுநர் அலுவலகத்தில் இன்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படாதவாறு, தகனசாலைகளில் மரணங்களைத் தகனம் செய்யும் நடவடிக்கைகள் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

அதேவேளை தகனசாலைகளின் ஏற்படும் திடீர் பழுது பார்க்கும் வேலைகள், மின்பிறப்பாக்கி பற்றாக்குறை, தகனசாலை பணியாளர்களின் பற்றாக்குறை, பணியாளர்களின் மேலதிக கொடுப்பனவுகள் உள்ளிட்ட  தகனசாலைகளுக்கு தேவையான எரிவாயு தேவைகளை தட்டுப்பாடின்றி விநியோகம் செய்தல் போன்ற காரணிகள் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X