2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

ஊவாவில் நேற்று 838 தொற்றாளர்கள்

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

 

ஊவா மாகாணத்தில் நேற்று (26)  838 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய,  பதுளை மாவட்டத்தில் 495 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் 343 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அறுவர் உயிரிழந்துள்ளனர்.

பதுளையில் 83 பேர் , பண்டாரவளை 35 பேர், எல்ல 37 பேர், கிராந்துருகோட்டை 07 பேர், ஹல்துமுள்ளை – 51 பேர், ஹாலிஎல – 07 பேர், ஹப்புத்தளை -56 பேர், கந்தகெட்டிய -06 பேர், லுணுகலை -09 பேர், மகியங்கனை -13 பேர், மிகாகிவுல – 03 பேர், பசறை -22 பேர், ரிதிமாளியத்த – 94 பேர் , சொரணதொட்டை 09 பேர், ஊவா பரனகம – 43 பேர், வெலிமட -20 பேர் என்றவகையில் 495 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் பதுளை, எல்ல, கிராந்துருகோட்டை, ஹல்துமுள்ளை, ஹாலிஎல, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் தலா ஒருவர் என்றடிப்படையில் ஆறுபேரும், வெலிமடையில் இருவருமாக எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹப்புத்தளையில் அடையாளம் காணப்பட்ட  56  தொற்றாளர்களில்  16 வயதுக்குட்பட்ட 11 சிறார்களும் உள்ளடங்கியுள்ளதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.சுதர்சன் தெரிவித்தார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X