Sudharshini / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா மாகாணசபை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால் ஊவா மாகாண சபைக்கான முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை நியமிக்குமாறு, மக்கள் விடுதலை முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு செய்யாது விடில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
மாகாணசபை மூன்று மாத காலமாக செயற்பாடற்று காணப்படுவதாகவும் அதேவேளை குறித்த மாகாணசபைக்கான தேர்தலானது, ஒரு வருடத்துக்கு முன்னர் நடைபெற்றுள்ள நிலையில் இன்னமும் மாகாணசபைக்கான முதல் அமைச்சரே மற்றைய அமைச்சரவையே நியமிக்கப்படவில்லை என ஊவா மாகாண சபையின் உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான வித்தியாரத்தின சுட்டிக்காட்டினார்.
குறித்த மாகாணசபையானது இயங்காமையினால் மக்கள் பலவித அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளதாக இச்சந்தர்ப்பத்தில் அவர் சுட்டிக்காட்டினார்.
55 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
3 hours ago