Kogilavani / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சுப் பொறுப்பை ஏற்பதை விட, ஊவா மாகாண முதலமைச்சராக தொடர்ந்து செயற்படவுள்ளதாக மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில், பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், அதிக்கூடிய விருப்பு வாக்குகளால் முதலிடத்தில் வெற்றிபெற்றார். இந்நிலையில், அரசியலில் அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'எனக்கு வழங்கப்படவுள்ள அமைச்சு பொறுப்பு குறித்து, பூரண திருப்திக்கொள்ள முடியாதுள்ளது. ஆனால், பிரதமரின் கூற்றுக்கமைய பதுளை மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்தபடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நாட்டில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து, மக்களுக்கு சேவையாற்றுவதன் ஊடாக நாடு பெரும் பயனடையும். மேலும், கட்சிகளுக்கிடையே மோதல்கள்; இன்றி சிறப்பாக செயற்பட முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையை பெறுவதற்கு இன்னும் 5 உறுப்பினர்களே தேவை. என்னால் இருவரை பெற்றுக்கொடுக்க முடியும். ஆனால், அம்முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை. காரணம், தேசிய அரசாங்கத்தை அமைத்து நாட்டை கட்டியெழுப்புவதே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாகும். அக்கொள்கையிலிருந்து எம்மால் விலகிச்செல்ல முடியாது.
என்னை பொறுத்தவரை மத்திய அமைச்சுப் பொறுப்பை ஏற்பதை விட, ஊவா மாகாணத்தில் முதலமைச்சராக இருக்கவே நான் விரும்புகிறேன்' என அவர் மேலும் கூறினார்.
5 minute ago
16 minute ago
23 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
23 minute ago
42 minute ago