Sudharshini / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
ஐக்கிய தேசியக் கட்சியின் பசறை பிரதேச சபை உறுப்பினர் ருக்மன் காமினி ராஜபக்ஷவின் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊவா மாகாண சபைக்கு முன்பாக நேற்று (23) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் ஷாமர சம்பத் தசநாயக்க, தன்னைத் தாக்கியதாக ஐ.தே.க.வின் பசறை பிரதேச சபை உறுப்பினர் ருக்மன் காமினி ராஜபக்ஷ, பொலிஸில் முறையிட்டிருந்ததுடன்; பதுளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்;.
இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஊவா மாகாண சபையின் ஐ.தே.க உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி தலைமையில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்துகொண்டதுடன் மகஜரொன்றையும் ஊவா மாகாணஆளுநர் எம்.பி.ஜயசிங்கவிடம் கையளித்தனர்.
மகஜரை வாசித்து விடயத்தை அறிந்துகொண்ட ஊவா மாகாண ஆளுநர், இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன் பக்கச்சார்பின்றி விசாரணை நடத்தி நியாயமான தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இச்சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பசறை நகரில் கறுப்புக் கொடிகள் பெருமளவில் தொங்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்கு உள்ளான பசறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ருக்மன் காமனி ராஜபக்ஷ, பசறை அரசினர் வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago