Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் நால்வர், அம்பியூலன்ஸ் வண்டி சாரதிகள் மூவர் உள்ளிட்ட அலுவலக சபையினர் பலருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நிலைமை நீடித்தால், பாரிய நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும் என, பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பிரதான வைத்தியர் பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், பதுளை வைத்தியசாலையில் 126 தொற்றாளர்கள் 4 வார்ட்டுகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் இவர்களுள் 46 பேர் ஒக்சிஜன் தேவையுடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் வைத்தியசாலையில் கட்டில்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நோயாளர்கள் கட்டிலுக்கு அடியிலும் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது வைத்தியசாலையில் வழங்கக் கூடிய அதிகூடிய கட்டில்கள் மற்றும் வார்டுகளை
கொரோனா சிகிச்சைக்காக வழங்கியிருந்தாலும் மேலும் பல வார்டுகள் கையகப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், வைத்தியசாலையில்
உயிரிழக்கும் அல்லது தொற்றுக்குள்ளான நோயாளர்களால் மாத்திரமே வைத்தியசாலையில் நிறைந்து காணப்படுவர் என்றார்.
எந்தவொரு நாட்டிலும் தொற்றைக் கட்டுப்படுத்தும் போதோ அல்லது மக்களை தெளிவுப்படுத்தும் போதோ உரிய புள்ளிவிபரங்களை சமூக மயப்படுத்தல் அவசியமாகும்.
ஆனால் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் வெளிவரும் புள்ளிவிபரங்களுக்கும் நாம் இங்கு அவதானிக்கும் புள்ளிவிபரங்களுக்கும் பாரிய மாற்றங்கள் உள்ளதென்றார்.
உதாரணமாக கடந்த 13ஆம் திகதி இலங்கையில் 214 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டம் 5ஆம் இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எமது மாவட்டத்தில் 317 பேர் அன்றைய தினம் பதிவானார்கள் என்றார்.
எனவே அதிக தொற்றாளர்கள் அடங்கிய மாவட்டமாக எமது மாவட்டம் உள்ளடக்கப்படவில்லை என் தெரிவித்த அவர், இவ்வாறான அறிக்கையிடல்களால் பாரிய சிக்கல்கள் ஏற்படுகிறது என்றார்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago