2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

“எஞ்சிய தடுப்பூசிகளை விரைவாகப் பெற்றுகொடுக்கவும்”

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிகமாக இனம்
காணப்படுவதுடன், மரணவீதமும் அதிகரித்துள்ளதால், உடனடியாக
நுவரெலியா மாவட்டத்துக்கு வழங்கப்பட வேண்டிய எஞ்சிய தடுப்பூசிகளை
விரைவாக பெற்றுத் தருவதற்கு, சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
வேலுசாமி இராதாகிருஸ்ணன், சுகாதார அமைச்சருக்கு கடிதம் மூலம்
கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது தடுப்பூசி 3,54,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிகமாகக் கிடைத்துள்ள இரண்டு இலட்சம் இரண்டாவது தடுப்பூசியில், 30 சதவீதமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிராந்திய சுகாதார திணைக்களத்தின்
தொற்றா நோய் பிரிவின் வைத்தியர் மதுர செனவிரத்ண
தெரிவித்திருக்கின்றார்.

“எனவே, 1,54000 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி தேவைப்படுகின்றது.அதே
நேரத்தில் முற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் 5,5000 பேருக்கு இன்னும்
முதலாவது தடுப்பூசி வழங்கப்படவில்லை.அவர்களுக்கும் மிக விரைவாக
தடுப்பூசிகளை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு நுவரெலியா
மாவட்டத்திற்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு கவனம்
செலுத்துவீர்கள்“ என எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வே.
இராதாகிருஸ்ணன் தனது கடித்ததில் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X