Ilango Bharathy / 2021 டிசெம்பர் 22 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு
நுவரெலியா மாநகரசபையின் அடுத்தாண்டுக்கான பட்ஜெட், எதிர்கட்சிகளின் ஆதரவுடன்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மாநகர சபையின் ஆட்சியதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சியிடம் காணப்படும் அதேவேளை, பட்ஜெட்டானது சபையின் முதலவர் சந்தனலால் கருணாரட்ணவால் முன்வைக்கப்பட்டது.
இதற்கு, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் என்பவற்றின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து அதிகபடியான
வாக்குகளால் பட்ஜெட்டை நிறைவேற்றியுள்ளனர்.
. மேயர் மற்றும் பிரதி மேயர் உள்ளிட்ட 23 உறுப்பினர்களைக் கொண்ட நுவரெலியா
மாநகரசபையில், பட்ஜெட் தொடர்பான அமர்வில் 21 பேர் கலந்துக் கொண்டனர். அத்துடன், ஸ்ரீ
லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களான திருமதி சிவரஞ்சனி மற்றும் இந்திக்க
முனவீர ஆகிய இருவரும் அமர்வில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், சபை அமர்வுக்கு வருகைத் தந்த 21 உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சி
சார்பில் 13 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினரும் ஸ்ரீ லங்கா
சுதந்திரக்கட்சியின் 2 உறுப்பினர்களும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 2 உறுப்பினர்களும் பட்ஜெட்டுக்கு ஆதேரவாக வாக்களித்ததுடன், இருவர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல்நடுநிலை வகித்தனர்.
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago