Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூன் 06 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக அரசியலில் தலைமைத்துவப் பண்புகளோடு சவால்களை ஏற்று வந்தவர்கள் ஒரு புறமிருக்க, சந்தர்ப்ப சூழ்நிலையில் அரசியலுக்குள் நுழைந்தவர்கள் பலர் இருக்கின்றனர் எனத் தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், "அப்படி வீட்டுபின்புறமாக நாடாளுமன்றம் வந்த ஒருவர், இன்று ஊடகப்போர்வையில், அரசியலில் சதா காற்றுப்போனவவர்களையும் இற்றுப்போன சக்திகளையும் அமரவைத்து பேசுவதன் மூலம், எந்த சக்தியும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது" எனக் குறிப்பிட்டார்.
இந்திய அரசின் நிதியுதவியுடன், மலைநாட்டு பதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சால் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஹட்டன் வெலிஓயா புதுக்காடு பிரிவில் அண்மையில் நடைபெற்றது. அமைச்சர் திகாம்பரமும் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜும், பிரசாரம் மாத்திரம் செய்கின்றனரேன முன்வைக்கப்பட்ட விமர்சனத்துக்கு, அந்நிகழ்வில் வைத்துப் பதிலளிக்கும் விதத்திலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிலையில் மலையக தனிவீட்டுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், "அமைச்சர் திகாம்பரத்தின் தலைமையில், மலையக வீடமைப்புத் திட்டம், பல புதிய பரிமாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாத்திரம்தான் தனி வீடுகள் வழங்கப்படும் என்ற நிலையில்தான் கம்பனிகள் செயற்பட்டுவந்தன.
"அண்மையில் பிரதமரைச் சந்தித்து, தோட்டத்தில் தற்போது வேலை செய்பவர்கள், முன்பு வேலை செய்தவர்கள், வேறு தொழில் புரிபவர்கள் என, லயத்தில் வாழும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தோம். அது கடன் அடிப்படை, கடனும் நன்கொடையும், முழுமையான நன்கொடை என வேறுபட்ட விதங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான ஒப்புதலையும் நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்.
"லயத்து வாழ்க்கையை இல்லாதொழிப்பதே எங்களது இலக்கு. உடனடியாக எல்லா லயங்களையும் ஓரிரவில் அழித்துவிட முடியாது. அதற்கான முறையான வேலைத்திட்டத்தையே நாம் இப்போது அறிமுகம் செய்து வருகின்றோம்" எனக் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025