Ilango Bharathy / 2021 ஜூலை 29 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராச்சி
புளத்கொஹுபிட்டிய நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், அடிக்கடி எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதால், தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
புளத்கொஹுபிட்டியவிலிருந்து அவிசாவளை நோக்கிய பயணத் தூரத்தில் 9 கிலோமீற்றர்
தூரத்திலேயே எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று உள்ளதுடன், புளத்கொஹுபிட்டிய
நகரிலிருந்து கேகாலை நோக்கி செல்லும் போது 12 கிலோமீற்றர் தூரம் வரை எவ்வித, எரிபொருள் நிரப்பு நிலையங்களோ இல்லை என சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, தமது எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய குறித்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் இல்லையென பதாகை அடிக்கடி காட்சிப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் புளத்கொஹுபிட்டிய பல்நோக்கு கூட்டுறவு சங்க நிர்வாக சபையின்
தலைவரும் புளத்கொஹுபிட்டிய பிரதேச செயலாளருமான ரம்யா ஜயசுந்தரவிடம் வினவிய
போது, எரிபொருள் கூட்டுதாபனத்திலிருந்து எரிபொருளை விநியோகிப்பதற்கு எடுக்கும் கால
தாமதமே இந்தப் பிரச்சினைக்கு காரணம் எனத் தெரிவித்தார்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026