2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

எலி காய்ச்சலால் இரத்தினபுரியில் 9 மரணங்கள்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இவ்வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால், 9 பேர் மரணித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார அத்தியட்சகர்  லக்மால் கோணார தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல் அதிகமாக நிலவிய காலத்தில், எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளமை தொடர்பில் நேற்று ஊ டகங்களுக்கு தகவல் வழங்குகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு முதல் ஏழு மாதங்களில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,250 ஆக காணப்பட்ட போதிலும் 2020 ஆம் ஆண்டு முதல் 7 மாதங்களில் மாத்திரம் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1,085 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் விவசாய வயல்கள் கமத் தொழில் நிலங்கள் மற்றும் கைவிடப்பட்ட இரத்தினக்கல் குழிகள் ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் எலிக்காய்ச்சல் அதிகமாகி வருகின்றமை இனங்காணப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X