2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

ஐந்தாண்டு காதல் இரும்புக்கு இரையானது

Editorial   / 2023 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் (09) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் எனஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை டயகம பிரதேசத்தை சேர்ந்த கணபதி அனுஷா தர்ஷனி (வயது 28)   என்ற  யுவதியே புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி ஹட்டன் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும் ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

பதுளை நோக்கி ஓடிக்கொண்டிருந்த புகையிரதத்தில்  ஹட்டன் மல்லியப்பு பகுதியில் வைத்து பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் செய்துகொண்டுள்ளார்.

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட யுவதியின் சடலம் காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X