2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஐந்து குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டன

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

மொனராகலை மாவட்டத்தில் பெய்து வரும் அதிக மழையுடனான வானிலையால், மொனராகலை நீர்பாசன வலயத்துக்குட்பட்ட பிரதான 5 குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது என, மொனராகலை நீர்பாசன பொறியியலாளர் இந்திரஜித் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சியம்பலாண்டுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட எத்திமலை குளம், கொட்டியாகல, சுகலாதேவி குளங்கள் மற்றும் புத்தல  பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒக்கம்பிட்டிய சத்தாதிஸ்ஸ வாவி, யுதஹனாவ வாவி என்பவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

குறித்த  5 பிரதான குளங்களின் கீழ், இம்முறை 5,000 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X