Ilango Bharathy / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கினிகத்தேனை நீர் விநியோக மத்திய நிலையம் ஊடாக, கினிகத்தேனை
பிரதேச மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர், கடந்த 5 நாள்களாக
விநியோகிக்கப்படாததால், பிரதேச மக்கள் பாரிய அசௌகரியங்களை
எதிர்நோக்கியுள்ளனர்.
பராமரிப்பு காரணங்களுக்காக ஒரு நாளைக்கு மாத்திரம் பிரதேசவாகளுக்கு
குடிநீர் விநியோகிக்கப்படாதென, நீர்விநியோக மத்திய நிலையம் ஊடாக
நுகர்வோருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஐந்து நாள்களாக
தமக்கு நீர் விநியோகிக்கப்படவில்லை என, பிரதேசவாசிகள்
குற்றஞ்சுமத்துகின்றனர்.
மேலும் இந்த குடிநீர் விநியோகத்தை தவிர நீரைப் பெற்றுக்கொள்ள தமக்கு
மாற்று வழிகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள நுகர்வோர், பவுசர்கள்
ஊடாகவேனும் தமக்கான நீரை விநியோகிக்க நீர் விநியோக மத்திய
நிலையம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக கினிகத்தேனை நகரிலுள்ள சில நிறுவனங்கள்
தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட தேசிய நீர்வழங்கல்
சபையின் பொறியியலாளரிடம் வினவிய போது, வட்டவளை- லொனக்
பிரதேசத்திலிருந்து தமது மத்திய நிலையத்துக்கு நீரை விநியோகிக்கும்
குழாய் கட்டமைப்பின் திருத்தப் பணிகள் காரணமாகவே கினிகத்தேனை
பிரதேசத்துக்கு நீரை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத்
தெரிவித்தார்.
அந்த பராமரிப்பு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும், வெகு
விரைவில் கினிகத்தேனை பிரதேச மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும்
நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றார்.
7 hours ago
7 hours ago
19 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
19 Jan 2026