எம். செல்வராஜா / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ ஐயப்ப சுவாமி மண்டல சக்திப் பூஜைப் பெருவிழா, எதிர்வரும் 4ஆம் திகதி, பதுளை, ரிதிபானை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் கோவிலின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சாஸ்தா சபரீஷா ஸ்ரீ ஐயப்ப சுவாமி யாத்திரைக் குழுவால், மேற்படி மண்டல சக்திப் பூஜைப் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்றையதினம் காலை, மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு தரவிய அபிஷேகம், புண்ணிய பூரண கும்பம், உள்வீதி வலம், அஸ்டோத்திர சத சங்காபிஷேகம், மண்டல சக்திப் பூஜை, 18 படிகளின் விசேட பூஜை ஆனந்தம் மிகு பஜனைகள், மஹா புஸ்பாஞ்சலி ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இறுதியாக நிகழ்வில் கலந்து கொள்ளும் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
இப்பெருவிழா நிகழ்வுகள் அனைத்தும், ஸ்ரீ பேச்சியம்மன் கோவில் பிரதம குரு சிவஸ்ரீ ஆர்.பி. சாமிக் குருக்களின் ஆசியுடன், குருசாமி க. இராஜேந்திரன், கீனக்கலை ஸ்ரீ கற்பக விநாயகர் சமேத ஸ்ரீ பாலமுருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ரெ. கோகுல்ராஜா குருசாமி ஆகியோர் தலைமைகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
28 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago