2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

‘ஐஸ்’ ஜோடி கிள்ளாடி: தங்கியிருந்த 3 வீடுகளிலும் சிக்கின

Editorial   / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ் போதைப்பொருள் சகிதம் கைது செய்யப்பட்ட கம்பளை தம்பதியினர் தங்கியிருந்த மூன்று வீடுகளை சோதனையிட்ட பொலிஸார், ஐஸ் போதைப்பொருள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

கம்பளையில் இருந்து கினிகத்தேனை வரை ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் நாவலப்பிட்டியவில் கடந்த 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.  அப்பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அப்பெண்ணின் உள்ளாடையில் மறைத்து வைத்தியிருந்த 52 பக்கெட் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.

இவர்கள் நாவலப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கணவனுக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு பொலிஸாரால் பெற்றப்பட்டிருந்தது. ஐந்து மாத கர்ப்பிணியான மனைவி எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 22 வயதான கணவரை அழைத்துக்கொண்டு, அவர்கள் தங்கி இருந்த மூன்று வீடுகளை பொலிஸார், கடந்த இரண்டு நாட்களும் சோதனைக்குட்படுத்தினர்.  இதன்போது இரு வீடகளில் இருந்து ஐஸ் போதைப்பொருள், உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கம்பளை, துனுகேஉல்ல வீதியில் உடகம - அங்கெலபிட்டிய பகுதியிலுள்ள வீடு, கம்பளை, தொலஸ்பாகை வீதியில் சிங்ஹாபிட்டிய பகுதியில் உள்ள வீடு என்பவற்றை சோதித்தபோதே ஐஸ் பக்கெட்டுகள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரான ஆண் இரு திருமணங்கள் செய்துள்ளார். முதல் மனைவிக்கு 15 மாத குழந்தையொன்று உள்ளது என தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X