Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடந்தோறும் அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்படும்
நிதியை, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக செலவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
என மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஆர். இராஜாராம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் முழுமையாகக் கவனம் செலுத்தி வரும் நேரத்தில், தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, அபிவிருத்தி பணிகளுக்கு என, வருடத்துக்கு ஒரு கோடி
ரூபாய் வீதம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் 225 கோடி ரூபா ஒதுக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய சூழ்நிலையில் நாட்டின் அபிவிருத்தியை விட மக்களின் உயிரைப் பாதுகாப்பதே
பிரதானமாக கருதப்படுகின்றது. ஆகவே, அபிவிருத்திப் பணிகளுக்கு அப்பால் மக்களின் உயிர்களைப் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவ வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago