2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஒன்பது வளைவு பாலம்; தேசிய உரிமையாக பிரகடனம்?

Kogilavani   / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.சுரேஸ்குமார்

பதுளை மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட புகையிரத பாதையில் காணப்படும் ஒன்பது வளைவு பாலத்தை, தேசிய உரிமையாக பிரகடனப்படுத்தி, நினைவு முத்திரை ஒன்றை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

மேற்படி பாலம் நிர்மாணிக்கப்பட்டு இந்த வருடத்துடன் 100 வருடங்கள் நிறைவடைகின்றன. பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில், 1921ஆம் ஆண்டு இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 3,100 மீற்றர் உயரத்தில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

25 அடி அகலமும் 80 அடி உயரமும் 300 அடி நீளமும் கொண்டதாகக் குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

பொறியியலாளரான டீ.ஜே.விமலசுந்தரவும் வடிவமைப்பாளரான ஹரல்ட் குத்பேர்ட் மார்வூட் ஆகியோரும் இந்த பாலத்தை உருவாக்குவதில் முன்னோடியாகச் செயற்பட்டுள்ளனர்.

பீ.கே.அப்புஹாமி என்பவராலேயே குறித்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. 

இன்றைக்கும் ஒரு நாளைக்கு சுமார் 6 தடவைகள் ஒன்பது வளைவு பாலம் ஊடக புகையிரதப் பயணங்கள் இடம்பெறுகின்றன. 

உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை வென்றுள்ள இந்தப் பாலம் இலங்கையின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X