2025 மே 03, சனிக்கிழமை

‘ஒன்றிணைந்தமை மகிழ்ச்சி’

Gavitha   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் மீது நம்பிக்கை கொண்டு, நோட்டன் ஒஸ்போன் தோட்ட மேற்பிரிவு மக்கள் ஒன்றிணைந்தமை வரவேற்கத்தக்கது” என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஒஸ்போன் மேற்பிரிவு கிறிஸ்தவ ஆலயத்துக்கு, ஒரு தொகை கூரைத் தகரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஒஸ்போன் மேற்பிரிவு தொழிலாளர்களின் பெரும்பாலானோர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமைத்துவம் மீது பெரும் நம்பிக்கை வைத்து இந்தச் சங்கத்துடன் இணைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இந்தப் பிரதேசத்தின் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பிரதேச அமைப்பாளரின் ஊடாக ஒஸ்போன் மேற்பிரிவுக்குப் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் மற்றும் இந்தச் சங்கத்தின் பிரதித் தலைவர் உதயகுமார் ஆகியோரின், நாடாளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அடுத்த ஆண்டு ஆரம்பம் முதல் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X