Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்டப்புற மக்களுக்காக ஒன்லைன் முறையின் கீழ் வைத்திய சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள புதிய கிராமபுற அபிவிருத்தி அதிகாரசபையினால் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி பதுளை, இதழ்கஸ்ஹின்னவத்த கிராமத்தினை மையமாகக் கொண்டு இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் நேற்றுமுன்தினம் (16) தோட்டப்புற வீடமைப்பு பிரிவின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் தோட்டப்புற வீடமைப்பு பிரிவின் கீழ் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த அமைப்பு, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்புச்சபை, புதிய கிராமபுற அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்கள்ஆகியவை அதற்காக செயற்படவுள்ளன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரின் ஆலோசனையின் பேரில் செயற்படும் இந்த ஒன்லைன் வைத்திய சேவை செயற்றிட்டம் O - Doc என பெயரிடப்பட்டுள்ளது.
அதற்காக ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் ரூ.100 செலவிடப்படுவதால் முழு குடும்பத்திற்கும் அதன் மூலம் சேவையை பெற்றுக்கொள்ளலாம். இதன் அடிப்படையில் 24 மணி நேர சேவையில் 150 இற்கும் மேற்பட்ட வைத்தியர் குழுவின் ஊடாக இந்த சேவையை பெறலாம்.
எதிர்வரும் காலங்களில் இந்த வைத்திய சேவை நாட்டின் அனைத்து தோட்டப்புற பகுதிகளுக்கும் அமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் உயர்அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
25 minute ago
35 minute ago