2025 மே 12, திங்கட்கிழமை

’ஒளிந்துகொண்டிருப்பவர்களை அடையாளம் காட்டவும்’

Kogilavani   / 2020 நவம்பர் 01 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்ட விதிமுறைகளை மீறி, கொழும்பு போன்ற வெளிமாவட்டங்களிலிருந்து வந்து வீடுகளில் தங்கி இருப்பவர்களை மக்கள் அடையாளம் காட்ட வேண்டும் என்று, கொட்டகலை- தலவாக்கலை பகுதிக்கான பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர்ராகவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறுத் தரப்பினர் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒரு சிலர் அலட்சியமாக நடந்துகொள்கின்றனர்.

இதனால், கொரோனா வைரஸ் தொற்று சமூகப்பவரலாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. கொரோனா வைரஸின் தாக்கம் பற்றி உணராமல் செயற்பட்டு வருகின்றனர். இது வேதனைக்குறிய விடயமாகும். 

'அத்துடன் தனிமைப்படுத்தல், வைரஸ் தொற்றை இனங்காணல் என்பன பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவே அன்றி அவர்களை பிரச்சினைக்குள் தள்ளுவதற்காக அல்ல என்பதையும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா வைரஸை முற்றாக ஒழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்' என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X