2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஒளிராத சமிக்ஞை விளக்குகளால் அதிகரிக்கும் விபத்துகள்

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

பதுளை- ரஜமஹாவிகாரைக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் பாரிய நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள வீதி சமிக்ஞை விளக்குகள்,நீண்டகாலமாகியும் ஒளிரவிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 பிரதான வீதிகள் இந்த இடத்தில் இணைவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவே இந்த வீதி சமிக்ஞை அமைக்கப்பட்டாலும், சமிக்ஞை விளக்குகள் ஒளிர்வதில்லை என்றும் இதனால் குறித்த இடத்தில் அதிக விபத்துகள் ஏற்படுவதுடன், பாதசாரிகளும் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் வினவியபோது, குறித்த கட்டுமானப் பணிகளுக்கு சொந்தமான ஒப்பந்த நிறுவனம் இதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் இதுவரை கையளிக்காமையே இதற்கான காரணம் என தெரிவித்தனர்.

எனினு, இந்த வீதி சமிக்ஞை விளக்குகள் பல மாதங்களுக்கு முன்னரே அமைக்கப்பட்டாலும் சில குறைபாடுகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்தப் பணிகளை பூர்த்தி செய்து வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிப்பதாக குறித்த ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X