Editorial / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரமதான பணியில் ஈடுபட்ட பெண்ணொருவரும் அவரது 14 வயது மகளும் ஒவ்வாமைக் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டச் சம்பவமொன்று, தல்தென, எகொடவெல பிரதேசத்தில், இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.
தல்தென, சொரனதொட்ட கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணும் அவரது 14 வயது மகளுமே, ஒவ்வாமைக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், சிரமதான பணியில், இன்று (07) ஈடுபட்டனர். இதன்போது மேற்படி இருவரும், மரங்களை வெட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
மரமொன்றிலிருந்து ஒருவகைப் பால், மேற்படி இருவரனதும் உடலில் பட்டதால், இருவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட இருவரையும் பிரதேச மக்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago