Kogilavani / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
நாவலப்பிட்டி ரத்மிரப்பிட்டிய பகுதியில், ஓட்டோவொன்று வீதியை விட்டுவிலகிச் சென்று பள்ளத்தில் விழுந்ததில், 30 வயது நபர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹரங்கல பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.புத்திக்க (வயது - 30) என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக மேற்படி நபரின் சடலம், நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்தே ஓட்டோ விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
27 minute ago
35 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
56 minute ago