Gavitha / 2021 மார்ச் 11 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
மஸ்கெலியா-சாமிமலை பிரதேச ஓல்டன் தோட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என, மலையக தொழிலாளர் முன்னணி நிதி காரியதர்சி புஷ்பா விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.
ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள், ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தால், நேற்று (10) பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக ஓல்டன் தோட்ட தொழிலாளர்களுக்கு தேவைப்படும் நீதிமன்ற உதவிகளை செய்வதற்கு வருகை தந்திருந்தபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஓல்டன் தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக, தோட்ட நிர்வாகம் தொழில் ரீதியாக, பல கெடுபிடிகளை தொடர்ந்தும் செய்து வருவதாகவம் தோட்ட நிர்வாக அதிகாரியால், தாம் அடக்கு முறைக்கு ஆளாகுவதாகவும் தொழிலாளர்கள் தங்களது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் கூறினார்.
அதேநேரத்தில், தோட்ட முகாமையாளரால் கடந்த மாதம் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து தோட்ட தொழிலாளர்கள் தோட்ட துறையை இடமாற்றம் செய்யும்மாறு முன்னெடுக்கப்பட்ட பணி நிறுத்தத்தின் போது, தன்னதிகாரத்தில், தோட்டத்துரை செயற்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்கு வாதத்தில், தொழிலாளர்களால் தோட்ட முகாமையாளர் தாக்கப்பட்டதாக, தொழிலாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தொழிலாளர்கள், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை தட்டிக்கேட்க உரிமை உண்டு என்றும் அது தொடர்பில் சரியான வழிக்காட்டலில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தால், சரியான தீர்வு கண்டிருக்க முடியும் என்றும் மாறாக ஓல்டன் தோட்ட மக்களுடைய பிரச்சினை, தாக்குதல்வரை செற்றுள்ளமை கவலைக்குறியது என்றும் அவர் மேலம் கூறினார்.
அதேநேரத்தில் தொழிலாளர்களை அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கி, அவர்களின் உரிமைகள், சலுகைகளை மறுத்து, அவர்களை நசுக்க நினைக்கும் சர்வாதிகாரிகளிடமிருந்து இம்மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
5 minute ago
13 minute ago
16 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
16 minute ago
18 minute ago