எம். செல்வராஜா / 2019 மார்ச் 19 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹப்புத்தளை - தங்கமலை தோட்டத்தில், கசிப்பு உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வந்த நால்வரை, ஹப்புத்தளை பொலிஸார், இன்று (19) கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் பின்னரே, இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, பீப்பாய்களில் நிரப்பப்பட்டிருந்த கசிப்பு, தயாரிப்புக்காக பயன்படுத்தும் மூலப்பொருள்கள், உபகரணங்கள் போன்றவற்றையும், பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, அங்கிருந்து தப்பியோட முயன்ற நால்வர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர் என்றும் 3 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருள்களே, இதன்போது மீட்கப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago