Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 08 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ், கே.சுந்தரலிங்கம்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி, சட்டவிரோத கசிப்பு மற்றும் இரத்தினக்கல்
அகழ்வில் ஈடுப்பட்ட மூன்று பேர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பட தோட்டத்தில் உள்ள, மாட்டு கொட்டகை ஒன்றில்
மிகவும் சூட்சுமான முறையில், நடத்தி வரப்பட்ட சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று
நோர்வூட் பொலிஸார் நேற்று முன்தினம் (06) சுற்றிவளைத்தனர்.
இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாய
சிலிண்டர், அடுப்பு, பால் சேகரிப்பு கேண், 20,000 மில்லி லீற்றர் கோடா, 3000 மில்லிலீற்றர்
சட்டவிரோத மதுபானம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களையும் உபகரணங்களையும் எதிர்வரும் 13 ம் திகதி ஹட்டன்
நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
32 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago