2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கச்சேரியில் விழுந்த கான்ஸ்டபிளுக்கு காயம்

Freelancer   / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில், வெளியரங்கில்  ஞாயிற்றுக்கிழமை (09)  இரவு நடைபெற்ற இசைக்கச்சேரியில் இடம்பெற்ற கைகலப்பை தடுப்பதற்கு சென்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தடுமாறி கீழேவிழுந்து காயமடைந்துள்ளார்.

அவர், பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தரின் கைகளில் ஒன்று முழங்கைக்கு அருகில் முறிந்து அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

                                                                                                            ஷேன்செனவிரத்ன

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X