2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா விற்றவருடன் வாங்கிய 9 பேரும் கைது

Sudharshini   / 2015 நவம்பர் 10 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி கட்டுகஸ்தோட்டை மற்றும் சுற்றுப் புறங்களில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாரிய அளவில் கேரள கஞ்சா விற்பனை செய்த ஒருவரையும் அவரிடமிருந்து கஞ்சாவை கொள்வனவு செய்த 09 இளைஞர்களையும் கட்டுகஸ்தோட்டை  பொலிஸார், திங்கட்கிழமை (09) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அவர், கண்டிப் பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபர், வாரத்துக்கு ஒருமுறை கொழும்பு சென்று சுமார் 200 அல்லது 250 கிராம் கேரளா கஞ்சாவை கொண்டு வந்து அதனை சுமார் 20- முதல் 50 கிராம் அளவிலான பொதிகள் செய்து இளைஞர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

சுமார் 20- முதல் 50 கிராம்களாக கேரள கஞ்சாவை கொள்வனவு செய்யும் இளைஞர்கள், அதனை மீண்டும் சிறிய பொதிகளாக்கி பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களுக்கு விற்பணை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் 30 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார். அவரை கண்டி பிரதான நீதவான்
ஏ.எம்.வசந்த குமார முன்னிலையில் திங்கட்கிழமையன்றே ஆஜர் செய்யப்பட்ட போது அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .