2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

கடத்தப்பட்ட மாணவி மீட்பு: சாரதி கைது

Kogilavani   / 2016 மே 04 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

15 வயது பாடசாலை மாணவியை முச்சக்கரவண்டியில் கடத்திச்சென்ற நபரை, ஹட்டன் பொலிஸார் மடக்கி பிடித்துள்ளதுடன் மாணவியையும் மீட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று(3) இரவு இடம்பெற்றுள்ளது.

பொகவந்தலாவை மோரா தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமி, வீட்டுக்கு வெளியேயுள்ள மலசலகூடத்துக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அவர் நீண்ட நேரமாகயும் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் அவரை தேடுவதற்கு ஆரம்பித்துள்ளனர். இதன்போது, சிறுமி கொண்டுச்சென்ற டோச் நிலத்தல் கிடந்துள்ளது.

இதனைக் கண்ட உறவினர்கள் அது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸில் உடனடியாக முறைப்பாடு செய்துள்ளனர்.  முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், ஹட்டன், மஸ்கெலிய பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கியதுடன் தேடுதல் நடவடிக்கையிலூம் ஈடுபட்டனர்.

இந்நிலையில் டிக்கோயா நகரில் கடமையிலிருந்த ஹட்டன் பொலிஸார், வீதியில் சந்தேகத்துகிடமாக பயணித்த முச்சக்கரவண்டியை சோதனையிட்டபோது, அதில் குறித்த சிறுமி இருந்ததாகவும் அவரை பாதுகாப்பாக மீட்டதுடன் முச்சக்கர வண்டியின் சாரதியையும் கைதுசெய்து பொகவந்தலாவை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தனர்.                                                                                                                                               

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .