Niroshini / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஏ.எம்.பாயிஸ்
கடந்த அரசாங்க காலத்தில், ஹிங்குரான சீனித் தொழிற்சாலைக்காக 91 பில்லியன் ரூபாயை கடனாகப் பெற்றுக்கொண்ட விவசாரம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு, விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
எம்பிலிபிட்டியவில், நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்தச் சீனித் தொழிற்சாலை மாதாந்தம் 1,600 மில்லியன் ரூபாய் பட்சத்தில் இயங்குகிறதெனவும் இதனால் இத்தொழிற்சாலை ஏலத்தில் விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இந்தத் தொழிற்சாலை இலாபத்தில் இயங்குவதாக சில ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டதாகச் சாடிய அவர், இவ்வாறான பொய் செய்திகளை எதிர்க்கட்சியினரே பரப்புகின்றனர் எனவும் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில், இந்தச் சீனித் தொழிற்சாலையின் நட்டத்தை ஈடுசெய்ய வர்த்தக வங்கிகளிடமிருந்து, 28 வீத வட்டிக்கு கடன் வாங்கப்பட்டதாகவும் இந்த விடயங்களை விசாரணை செய்வதற்கு குழுவொன்றை நியமித்துள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார.
'செவனகல, பெலவத்த சீனித் தொழிற்சாலைகளை தாங்கள் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர், நட்டத்தில் இயங்கி வந்த அத்தொழிற்சாலைகள், தற்போது இலாபத்தில் இயங்குகி வருகின்றன அதோபோல், ஹிங்குரான சீனி தொழிற்சாலையையும் இலாபம் பெரும் நிலைக்கு மாற்றி, ஊழியர்களுக்கும் கரும்பு உற்பத்தியாளர்களும் சிறந்த வருமானம் பெறும் நிலையை ஏற்படுத்திக் கொடுப்போம்' எனவும், அவர் தெரிவித்தார்.
12 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
4 hours ago
7 hours ago