Sudharshini / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபையின் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் டபிள்யூ.சோமதாச, இன்று (23) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத் தொகுதியிலுள்ள அலுவலகத்தில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
சப்ரகமுவ மாகாண சபையின் எதிர்கட்சி தலைவராக கடமையாற்றிய டாக்டர் துஷிதா விஜேமான, நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று நாடாளுமன்றத்தக்கு தெரிவானதையடுத்து, எதிர்கட்சி தலைவர் பதவி வெற்றிடமாக இருந்தது. இந்நிலையில் அவ்வெற்றிடத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரான டபிள்யூ.சோமதாசவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்திருந்தார்.
இவர், கடந்த 17 வருடங்களாக சப்ரகமுவ மாகாண சபையில் உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago