2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கடுமையான கட்டுப்பாடுகளுடன் சிவனொளிபாதமலை யாத்திரை

Freelancer   / 2021 டிசெம்பர் 18 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ், மஸ்கெலியா நிருபர், மஸ்கெலியா நிருபர், 

2022ம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரனை தினமான இன்று ஆரம்பமானது. 

கடல்மட்டத்தில் இருந்து 7359 அடி உயரமான கூம்பு வடிவிலான மலை உச்சியில் காணப்படும் 1.8மீற்றர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின்
காலடி சுவடாக பௌத்தர்கள் கூறுகின்றனர்.

இந்து சமய நம்பிக்கையின் படி சிவபெருமானின் காலடி  சுவடாக கூறப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை ஆதாமின் கலாடி சுவடாக கூறுகிறார்கள்.

இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்தா ரஜமஹாவிகாரையில் இருந்து புனித
விக்கிரகங்கள் நல்லதன்னி பாதை வழியாக நேற்று நல்லிரவு மலை உச்சிக்கு
எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலையின் நாயக்க தேரர். பெங்கமுவ
தம்மதின்ன தெரிவித்தார். 

இந்த முறை நான்கு வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணித்தது.

அந்தவகையில் பலாங்கொடை- பொகவந்தலாவ வழியாக ஒரு ஊர்வலம் பயணித்ததோடு,

அவிசாவலை,ஹட்டன் –நல்லதன்னி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலமும் செல்ல.

மற்றய ஊர்வலம் குருவிட்ட-இரத்திபுரி ஊடா மற்றய ஊர்வலம் பயணித்தது. மற்றது

பெல்முதளை இரத்தினபுரி- ரஜமாவத்தை வழியாக சென்றது.

கொரேனா பரவல் காரணமாக புனித யாத்திரை காலங்களில்  சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்கள் தடுப்பூசி அட்டை அல்லது அதன் நகலை உடன் வைத்திருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி வர்த்தக நிலையங்களை
நிர்மாணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுவட்டார பகுதிகளில் யாசகம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு முகக்கவசம் சமூக இடைவெளி என்பன கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 

இன்றய தினம் ஆரம்பமாகிய சிவனொளிபாதமலை பருவகாலம் 2022ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதியுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X