2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கட்டாக்காலி எருமைகளை இறைச்சியாக்கும் கும்பல்

Freelancer   / 2023 ஜூன் 19 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பல கிராமங்களில் சுற்றித்திரியும் எருமை மாடுகளை, இனந்தெரியாதோர் அதனை கொன்று இறைச்சிக்காக எடுத்துச் செல்வதாக கொத்மலையின் பல கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொத்மலை, கடதொர, ரன்மல்ஹா பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு பெரிய எருமை மாடொன்றை கொன்று அதன் தலையை வீதியில் விட்டுவிட்டு எஞ்சிய பாகங்களை இறைச்சிக்காக சிலர் எடுத்துச் சென்றுள்ளனர்.

கொத்மலையை சூழவுள்ள கிராமங்களில் அதிகளவான எருமைகள் சுற்றித் திரிவதாகவும், இவற்றில் பெரும்பாலான விலங்குகள் மக்களால் கைவிடப்பட்டமையினால் தற்போது காட்டு எருமைகளாக மாறியுள்ளதாகவும் மலையக சுற்றாடல் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

சுற்றித் திரியும் எருமை வனப் பகுதிகளை அண்மித்து வாழும் மக்கள்  சிலர்  மாடுகளை இறைச்சிக்காக வேட்டையாடி வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி சுற்றித் திரியும் எருமை மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X