Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 08 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் கீழுள்ள ப்ரௌன்ஸ்வீக் தோட்ட கெஸ்கிபன் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான டி.வி.சோமதாச (வயது 84) என்பவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அவரது மகன் செய்துள்ள முறைப்பாட்டில், கண்டி வைத்திய சாலைக்கு மாதாந்த சிகிச்சைக்காக கடந்த முதலாம் திகதி சென்றவர், இன்று வரை வீடு திரும்பவில்லை எனவும் கடந்த ஏழு தினங்களாக தேடிய போதும் அவர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் உள்ளவரை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிய தருமாறும் அல்லது மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு அல்லது அவரது இல்லத்திற்கு அறிய தருமாறும் அவரது மனைவி பொது மக்களிடம் வினயமாக கேட்டுக் கொண்டனர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய இலக்கம் 052 2277222. குடும்ப அலைபேசி இலக்கங்கள் 0714 291 001, 0754 291 160 மற்றும் 0756 010 069.
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago