Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
கண்டி மாவட்டத்தில் அன்றாட கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து
செல்வதாகவும் இதற்கமைய, ஜூலை மாதத்தை விட, இந்த மாதத்தின் முதல் இரண்டு
வாரங்களிலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என, கண்டி மாவட்டத்தின் பிரதேச தொற்று நோய் விசேட வைத்தியர் பசன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (18) நடைபெற்ற மத்திய மாகாண கொரோனா ஒழிப்பு குழு கூட்டத்திலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், இவ்வாறு கண்டி மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பது குறித்து, தீவிர அவதானம் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்த அவர், இதுவரை இங்கு 30 வயதுக்கு மேற்பட்ட 30 சதவீதமானவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர் என்றார்.
இவர்களுக்கான இரண்டாவது டோஸ் நேற்று (18) ஆரம்பிக்கப்பட்டதென்றும் தடுப்பூசி
செலுத்திக்கொண்டாலும் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார
வழிகாட்டல்களை அனைவரும் பின்பற்றுவது அவசியம் என்றார்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago