2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கண்டியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

R.Maheshwary   / 2022 ஜூலை 18 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என்று மத்திய மாகாண சுகாதார திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது இடைக்கிடையே பெய்த வரும் மழை காரணமாக, டெங்கு நுளம்புகளின் பெருக்கம் காணப்படுவதாகவும் மக்கள்  தமது சுற்றாடலை துப்பரவு செய்து, நுளம்புகளை இல்லாமலாக்க வேண்டும் என்றும் சுகாதார பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் இதுவரையில் கண்டி மாவட்டத்தில் 2066 டெங்கு நோயாளர்கள் அடையாயம் காணப்பட்டுள்ளதாகவும்  ஜனவரி மாதத்தில் 310 நோயாளர்களும் பெப்ரவரி மாதத்தில் 113 நோயாளர்கள், மார்ச் மாதத்தில் 102 நோயாளர்கள், ஏப்ரல் மாதத்தில் 157 ​நோயாளர்கள், மே மாதத்தில் 326 நோயாளர்கள், ஜூன் மாதத்தில் 646 நோயாளர்கள் மற்றும் ஜூலை மாதத்தில் இதுவரை  412 நோயாளர்களுமாக இது வரை மொத்தமாக வருடத்தில் 2066 நோயாளர்கள் பதிவாகி உள்ளதாகவும் சுகாதார பிரிவினர்  தெரிவிக்கின்றனர்’ .

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X