Editorial / 2021 ஏப்ரல் 16 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக, 204 குடும்பங்களைச் சேர்ந்த 878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்டி மாவட்ட உதவி பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கண்டி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கண்டியில் கங்கவட்ட கோரல,மெததும்பர, பாத்ததும்பர,பாத்த ஹேவாஹெட்ட, ஹரிஸ்பத்துவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளே அதிகம் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,மழையால் பாதிப்பை எதிர்நோக்கியவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்துள்ளார்.
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago