S.Sekar / 2021 நவம்பர் 18 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவ செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதெகி பங்கேற்றார். கொழும்பு அலரி மாளிகைக்கும், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கண்டி, கன்னோருவ கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குமிடையே ஒன்லைனில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நீர் விநியோக அமைச்சர் வாசுதேவ நானயக்கார, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே மற்றும் இதர இலங்கையின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு நேற்று (17) இடம்பெற்றது.

2001 ஆம் ஆண்டு முதல் கண்டி பிராந்தியத்தில் நீர் விநியோக வசதிகள் நிர்மாணம், நீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தல் அடங்கலான நீர் பிரிவுக்கு ஜப்பான் ஆதரவளிக்கின்றது.
2010 மார்ச் மாதம் தீர்மானிக்கப்பட்ட 14 பில்லியன் யென்கள் கடனுதவியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் துப்புரவு வசதிகள் நிர்மாணிக்கப்பட்டன. ஒவ்வொரு வீடுகளுக்குமான இணைப்புகளை வழங்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. கழிவுநீர் சுத்திகரிப்பினூடாக வாழ்விட மற்றும் துப்புரவு சூழல் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் பாரம்பரியத்தை ஜப்பானிய தொழில்நுட்பத்தை இணைக்கும் வகையில் இந்த திட்ட உதவி அமைந்திருக்கும் என குறிப்பிட்ட தூதுவர் மிசுகொஷி, அடுத்த ஆண்டில் இரு நாடுகளுக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகிய 70 வருடங்கள் பூர்த்தியடையவுள்ள நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பரஸ்பர உறவுகளின் அடையாளமாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
3 minute ago
24 minute ago
33 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
24 minute ago
33 minute ago
50 minute ago