2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

கண்டி மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவு

Kogilavani   / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கண்டி மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா மரணம், நேற்று (8) பதிவானது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 63 வயது பெண்ணொருவரே மரணமடைந்துள்ளார்.

இவர் உடல்நலக் குறைவு காரணமாக, நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக, உறுதியாகியுள்ளது.
கண்டி மாவட்டத்தில் 73 வயது நபரொருவர் ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X