2025 ஜூலை 05, சனிக்கிழமை

கண்டியில் பெண் கைது

Kogilavani   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, ஸ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாட்டுக்காக வருகின்ற பக்தர்களின் பணத்தை திருடி வந்ததாக கூறப்படும்  பெண்ணை, சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 25,000 ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளனர்.

தலதா மாளிகைக்கு வந்த பக்தர்களின் பணம் திருடப்படுவதாகவும், பக்தர்களின் உடமைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும் தலதா மாளிகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவரை கைதுசெய்தனர். அப்பெண்ணை கைதுசெய்த போது அவரிடம் பெருந்தொகையான பணம் இருந்துள்ளது.

மாவத்தகமையை சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .