Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அங்கும்புரை, பஹல பதிங்கொல்ல பிரதேசத்தில் கத்தியால் குத்தி நபரொருவரைக் காயப்படுத்தியவருக்கு, 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஐந்துவருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, கண்டி மேலதிக நீதிமன்றம் நேற்று (18) தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு 75 ஆயிரம் ரூபாய் நட்டஈடும் வழங்குமாறும், தண்டப்பணமாக 1,500 ரூபாயைச் செலுத்துமாறும் கண்டி மேலதிக நீதிவான் யுரேஷா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.
அங்கும்புர, பஹல பதிங்கொல்ல பிரதேசத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்குறித்த தாக்குதல் சம்பவத்தில், வை.பி.யூ.புஸ்பகுமார என்ற நபர் காயங்களுக்கு உள்ளாகினார்.
தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாகவே, இந்தக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கபட்ட நபர், தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், நீடிக்கப்பட்ட மூன்று மாத கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவருக்கான 75 ஆயிரம் ரூபாய் நட்டஈட்டை வழங்கத்தவறும் பட்சத்தில் அதற்கும் நீடிக்கப்பட்ட 3 மாத கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago