2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கத்தியைக் காட்டியதால் கத்தியும் இழந்துவிட்டார்

Freelancer   / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய நபரிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக கத்தி கூச்சலிட்டபோதும், அந்தநபர், சுமார் 2 இலட்சத்துக்கு 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலியை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று மஹிங்கனையில் இடம்பெற்றுள்ளது.

மஹியங்கனை, மகாவலி ஆற்றங்கரையில் நின்றிருந்த 54 வயதான நபரிடமே  கத்தியைக்  காண்பித்து இவ்வாறு சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. இவர், நகரிலுள்ள சாரதி பயிற்சி பாடசாலைக்கு சென்றுவிட்டு சில தேவைகளுக்காக மகாவலி ஆற்றங்கரைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி, சங்கிலியை அபகரித்துச் சென்றுவிட்டார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர் 

 பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் மஹியங்கனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஹான் விஜேரத்ன உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர

                                                                                                                                                ராமு தனராஜா

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X