Editorial / 2022 ஜூன் 15 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை இன்று (14) இடம்பெற்றதுடன் இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை அவருக்கு உத்தியோகபூர்வ கடிதம் மூலமாக அறிவிக்கப்படவுள்ளது.
இதேவேளை, விசாரணைகளையடுத்து வேலு யோகராஜ் தமது இ.தொ.கா உபதலைவர் பதவியை இராஜனாமா செய்துள்ளார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒழுக்காற்று நடவடிக்கைக்குழு காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் இன்று (14) கூடியது.
நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட கந்தபளை நகரில் நுவரெலியா பிரதேச சபைக்கு அரசாங்கம் வழங்கிய காணி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் முழுமையாக ஆராயப்பட்டு,வேலு யோகராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
19 minute ago
30 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
55 minute ago
1 hours ago