Editorial / 2018 ஜூன் 29 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஸ்
நுவரெலியா பிரதேச சபையின் 76 இலட்சம் ரூயாய் செலவில், கந்தப்பளை மற்றும் நானுஒயா ஆகிய பிரதான நகரங்களில், பொது மலசலகூடங்கள் அமைக்கப்படவுள்ளனவென, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.
இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும், அவர் மேலும் கூறினார். இதற்கமைவாக கந்தப்பளை நகரில், 38 இலட்சம் ரூபாய் செலவிலும் நானுஒயா நகரில் 38 இலட்சம் ரூபாய் செலவிலும், பொது மலசலகூடங்கள் அமைக்கப்படவுள்ளன என்று அவர் மேலும் கூறினார். நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட அம்பேவெல, பட்டிபொல, லவர்சிலீப், கட்டுமான, மீப்பிலிமான ஆகிய பிரதேசங்களில், கட்டங்கட்டமாக பொது மலசலகூடங்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025