2026 ஜனவரி 21, புதன்கிழமை

கந்தப்பளை விவசாயிகள் போராட்டம்

Ilango Bharathy   / 2021 ஜூலை 01 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

6.ஆ.ரமேஸ்

பசளை இன்மையைச் சுட்டிக்காட்டி, கந்தப்பளை பிரதேச விவசாயிகள் ஒன்றிணைந்து, கந்தப்பளை- மஹிந்த வித்தியாலயத்துக்கு முன்பாக நேற்று (30) பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்தப்பளை ஸ்ரீ ஜிநேன்ராராமய விகாராதிபதி தம்பகொள்ளே சோமாநந்த தேரர், தலைமையில் இடம்பெற்ற இப் போராட்டத்தில்  சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.

இதன்போது அரசாங்கம் அசேதனப் பசளையை விவசாயிகளுக்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை மறந்துவிட வேண்டாம் எனத் தெரிவித்து, விவசாயிகளின் கையொப்பத்துடனான மனுவொன்றை  ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென போராட்டத்தை வழிநடத்திய தேரர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X